பாசன வாய்க்கால் படித்துறை புதுப்பித்து கட்டப்படுமா?

பட்டுக்கோட்டை பாசன வாய்க்காலில் படித்துறை இடிந்து கிடக்கிறது. இதை புதுப்பித்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை பாசன வாய்க்காலில் படித்துறை இடிந்து கிடக்கிறது. இதை புதுப்பித்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இடிந்து விழுந்த படித்துறைகள்
பட்டுக்கோட்டை நகரின் வட கிழக்கு பகுதியில் கல்லணைக் கால்வாயின் கிளை வாய்க்காலான ராஜா மடம் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் தஞ்சை சாலையில் இருந்து முத்துப்பேட்டை சாலை வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் படித்துறைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த படித்துறைகள் பராமரிப்பின்றி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இடிந்து கிடக்கின்றன.
ஆற்றுக்குள் இருபுறமும் தண்ணீர் எளிதாக செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சிமெண்டு தாங்கு சுவர்களும், தடுப்புகளும் சிதிலம் அடைந்து காணப்படுகிறது.
வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் பழுதடைந்து கிடக்கும் பாலங்களையும், இடிந்து கிடக்கும் படித் துறைகளையும் புதுப்பித்து கட்டவேண்டும். பாசன வாய்க்காலில் குவிந்து கிடக்கும் குப்பை, கூளங்களை அகற்றி தூர்வார வேண்டும்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பாசன வாய்க்காலின் அருகே உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதையும், வாய்க்காலில் குப்பை, கூளங்களை கொட்டுவதையும் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story