பணகுடி அருகே பஸ்-கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
பஸ்-கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது
பணகுடி:
பழனியில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்ற குளிர்சாதன வசதி கொண்ட அரசு பஸ் நேற்று மாலை 5 மணியளவில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பு விலக்கு நாற்கர சாலையில் சென்றது. அப்போது சாலையின் குறுக்கே சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக பஸ்சை டிரைவர் திருப்பியதால், எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது மோதியது.
இதையடுத்து பின்னால் வந்த மற்றொரு காரும், விபத்துக்குள்ளான பஸ்சின் பின்புறம் மோதியது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்துகளில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர் விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த சபாநாயகர் அப்பாவு, காரில் இருந்து இறங்கி சென்று, விபத்துக்குள்ளான வாகனங்களில் யாரேனும் காயமடைந்துள்ளனரா? என்று பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த பணகுடி போலீசாரிடம் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார். பின்னர் போக்குவரத்து சீரானதும் சபாநாயகர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story