தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 March 2022 9:23 PM IST (Updated: 26 March 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்

திண்டுக்கல்:
குவிந்து கிடக்கும் குப்பை
போடி 4-வது வார்டு வினோபாஜி காலனியில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் அங்குள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்வளவன், போடி.
உயர்கோபுர மின்விளக்கு வேண்டும்
குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் கரூர் சாலையில் 3 ரோடு சந்திப்பில் தெருவிளக்குகள் இருந்த போதிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகம், கோவிலூர்.
வீணாகும் குடிநீர்
திண்டுக்கல்லை அடுத்த கஸ்தூரிநாயக்கன்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்புவதை கண்டறியும் கருவி பொருத்தப்படவில்லை. மேலும் தொட்டியில் தண்ணீர் நிரம்பிய பிறகு மின் மோட்டாரை நிறுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் தொட்டியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.
பழுதான அடிபம்பு
சின்னலுப்பை ஊராட்சி செல்லப்பட்டநாயக்கன்பட்டியில் உள்ள அடிபம்பு பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பழுதடைந்த அடிபம்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-துரைச்சாமி, செல்லப்பட்டநாயக்கன்பட்டி.
----------------

Next Story