பொமல்லாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு


பொமல்லாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 26 March 2022 11:23 PM IST (Updated: 26 March 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

பொ.மல்லாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் மறைமுக தேர்தல் கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் தலைவர் பதவியை கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கட்சியின் சார்பில் தலைவர் பதவிக்கு சின்னவேடி அறிவிக்கப்பட்டார். இவருக்கு எதிராக தி.மு.க. வேட்பாளர் சாந்தி புஷ்பராஜ் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தியது. இதனால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஒத்தி வைக்கப்பட்ட துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக அறிவிக்கப்பட்ட சின்னவேடி போட்டியிடவில்லை. மறைமுக தேர்தலிலும் கலந்து கொள்ளவில்லை. இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஸ்ரீதா செந்தில்குமார் பேரூராட்சி துணை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நாகராஜன் வழங்கினார்.

Next Story