மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூர் கோவிலில் வடமாநில பக்தர்கள் தரிசனம்

மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூர் கோவிலில் வடமாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர்
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் சுப்பிரமணியர், ஜெயம் பெருமாள், ஜெகதீஸ்வரர்-திரிபுரசுந்தரி அம்மன், 18 சித்தர்கள், தவக்கோலத்தில் சிவன் மற்றும் தெப்பக்குளத்தில் ராகு-கேது சன்னதிகள் அடங்கிய கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநிலத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்த பக்தர்கள் தஞ்சாக்கூரில் தவக் கோலத்தில் உள்ள சிவன் சிலையும், தெப்பக்குளத்தில் ராகு-கேதுவிற்கு தனியாக சன்னதியும் இருப்பதை கேள்விப்பட்டு தஞ்சாக்கூருக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.தலைமை பூசாரி பாலசுப்பிரமணியம் வடமாநில பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
Related Tags :
Next Story