போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஆன்லைனின் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு வருகிற ஜூன் மாதம் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி கடைசி நாள். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறந்த வல்லுனர்களை கொண்டு வருகிற 1-ந்தேதி முதல் ஆன்லைன் வாயிலாக நடக்கிறது.
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடக்கும். பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி தேர்வுகள், வினாடி-வினா மற்றும் குழு விவாதங்கள் நடத்தப்படும். மேலும் இந்த அலுவலக நூலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் பயின்று கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 6 பேர் தற்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக உள்ளனர். எனவே, இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story