லாரி மோதி டி.வி. மெக்கானிக் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி டி.வி. மெக்கானிக் பலியானார்.
சேலம்:-
சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 40). டி.வி. மெக்கானிக். இவர், நேற்று மதியம் திருச்சி மெயின்ரோட்டில் பிரபாத் சிக்னல் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரின் பின்னால் வந்த லாரி, யுவராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட யுவராஜ் மீது லாரி ஏறி இறங்கியதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story