விழுப்புரம் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 1144 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 1144 பேர் கைது செய்யப்பட்டனர்
விழுப்புரம்
சாலை மறியல்
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து சட்டமாக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்களை (நான்கு தொகுப்பு) திரும்ப பெற வேண்டும், பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் கலந்துகொண்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் மாவட்டகவுன்சில் தலைவர் கிருஷ்ணன், சண்முகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி, தலைவர் ஞானசேகரன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி, பொருளாளர் ஜான்போஸ்கோ, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, ரகோத்தமன், நிர்வாகப் பணியாளர்கள் சங்க பொருளாளர் குபேரன், சலவை தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், மின்வாரிய தொ.மு.ச. நிர்வாகி வேல்முருகன், நியாயவிலைக்கடை பணியாளர் சங்க தொ.மு.ச. மாவட்ட தலைவர் ஸ்ரீதர், கள்ளக்குறிச்சி தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் திராவிடமணி, செயலாளர் பழனிமுத்து, துணைத்தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
1,144 பேர் கைது
இந்த மறியல் போராட்டம் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 250 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலும், பாக்கம் கூட்டுசாலையில் ஏ.ஐ.டி.யூ.சி. ஒன்றிய செயலாளர் வசந்தராஜ் தலைமையிலும், திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ராமதாஸ் தலைமையிலும், மற்றொரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் இன்பஒளி தலைமையிலும், கிளியனூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் திருமூர்த்தி தலைமையிலும், மற்றொரு இடத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் அர்ஜுணன் தலைமையிலும், விக்கிரவாண்டியில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் கலியமூர்த்தி தலைமையிலும், கண்டமங்கலத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமையிலும், மற்றொரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமையிலும், அவலூர்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேல்மலையனூர் நகர செயலாளர் முருகன் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது.
அதேபோல் கூட்டேரிப்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மயிலம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையிலும், செஞ்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத்தலைவர் குமார் தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் சி.ஐ.டி.யு. வட்ட செயலாளர் முருகன் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாராயணன் தலைமையிலும் என மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 1,144 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க செயல் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கோட்ட பொருளாளர்கள் பாண்டியன், வேலு மாநில உதவி செயலாளர் கலியமூர்த்தி, தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட தலைவர் கருணாகரன், செயலாளர் நம்பிராஜன், தேசிய அஞ்சல் ஓய்வு பெற்றோர் நலச்சங்க தலைவர் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எல்.ஐ.சி.அலுவலகம்
விழுப்புரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க விழுப்புரம் கிளையின் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். வளர்ச்சி அதிகாரிகள் சம்மேளன கோட்ட தலைவர் சிவராமன், தொழிற்சங்க பொருளாளர் குருமூர்த்தி கண்டன உரையாற்றினார். இதில் எல்.ஐ.சி. ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story