சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில், உயிர்ச்சூழல், வனவிலங்குகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று நடைபெற்றது. குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசும்போது, வனப்பகுதிகள், புல்வெளிகள், நீர் ஆதாரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதால், அங்கு தாவர இனங்கள், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குளிர்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பினை மாணவர்கள் உணர்ந்து வீட்டில் இருந்தே சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றார். இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story