மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் டூவிபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை நடத்தினர்.
அப்போது, தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்த மாடசாமி மகன் சுப்புராஜ் (வயது 23), தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பை சேர்ந்த முத்துகுமார் (37), தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்த முத்துராஜ் (46) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுப்புராஜ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story