கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

நாகையில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரும், மண்டல இணைப்பதிவாளருமான பெரியசாமி தலைமை தாங்கினார். பொது வினியோக திட்ட பதிவாளர் கனக சபாபதி, நாகை சரக துணை பதிவாளர் முகமது நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு உடனே திரும்ப வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்து உடனடியாக சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story