முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வன காவலர் கைது


முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வன காவலர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 10:40 PM IST (Updated: 1 April 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வன காவலர் கைது செய்யப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா(வயது 37). இவரும் ராசிபுரம் அருகே உள்ள திருமானூர் பகுதியில் வன காவலராக பணிபுரிந்து வரும் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஞானப்பிரகாசம்(37) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையே ஞானப்பிரகாசம் தனது மனைவிக்கு தெரியாமல் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஜனனி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 

இதுகுறித்து சுஜாதா கொடுத்த புகாரின்பேரில் ஞானப்பிரகாசம், இவருடைய தந்தை கதிரேசன், 2-வது திருமணம் செய்து கொண்ட பெண் ஜனனி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானப்பிரகாசத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story