வேலை வாய்ப்பு முகாமில் 245 பேருக்கு பணி நியமன ஆணை


வேலை வாய்ப்பு முகாமில் 245 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 1 April 2022 11:01 PM IST (Updated: 1 April 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 245 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து ஒன்றிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு பேரணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். உதவித் திட்ட அலுவலர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார். 

அமுலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 12 நிறுவனங்களின் மூலம் 245 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, ஒன்றிய செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அற்புதம், பரமேஸ்வரி, சரிதா, தமிழ்செல்வி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story