வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை மிரட்டிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை மிரட்டிய ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளிக்கூடம் நடந்து கொண்டு இருந்தபோது வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் ஆம்புலன்ஸ் டிரைவரான பிரவின் (வயது 20) என்பவர் மொபட்டில் அத்துமீறி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார்.
அப்போது எதற்காக பள்ளிக்குள் அத்துமீறி வருகிறாய் என தலைமை ஆசிரியர் சுப்பிரமணி (59) கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரவின் தலைமை ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து பிரவினை கைது செய்தார். பின்னர் அவரை நாமக்கல் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story