பள்ளிபாளையம் புற்றுமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்

பள்ளிபாளையம் புற்றுமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் 9-ம் படி அருகில் உள்ள ஸ்ரீ புற்று மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. பழமைவாய்ந்த இந்த கோவிலில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் செல்வது சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று இரவு 8 மணி அளவில் ஆண், பெண் பக்தர்கள், சிறுவர், சிறுமிகள் என 500-க்கும் மேற்பட்டோர் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் புதன்சந்தை காவிரி ஆற்று பகுதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு ராஜவீதி, திருச்செங்கோடு ரோடு, பஸ் நிலையம் வழியாக சென்று கோவிலை அடைந்தது. இதையடுத்து தீச்சட்டி ஏந்தி வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story