உள்நாட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் உள்நாட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில்
உள்நாட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மறுசீரமைப்பு என்ற பெயரில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் என மூன்று வட்டங்களாக பிரித்து உள்நாட்டு மீனவர்களை இணைத்து அலைகழிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மீன்வளத்துறை பிறப்பித்துள்ள அரசாணை 122-ஐ கைவிட வேண்டும். 2013-ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த (நீர் உயிரின வளர்ப்பு) தனி உதவி இயக்குனர் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் உள்நாட்டு மீனவர்களுக்காக தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்.
மீனவர் நலவாரியத்தை செயல்படுத்தி நிதிச்சலுகைகள் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் நேற்று நாகர்கோவில் வடசேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வடசேரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜேசுராஜன் தலைமை தாங்கினார். ஊர் தலைவர்கள் ஜெயம் (கிருஷ்ணன்கோவில்), ஜெயசீலன் (மீனாட்சிபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மைய தலைவர் அந்தோணி மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story