ஆளுமை திறன் மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கு


ஆளுமை திறன் மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கு
x
தினத்தந்தி 2 April 2022 1:16 AM IST (Updated: 2 April 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆளுமை திறன் மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கு

மணிகண்டம், ஏப்.2-
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட குழுமத்தின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளுக்கான பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஆளுமை திறன் மேம்படுத்துதல் குறித்த  கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மருந்து தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் ருக்மணி பெண்களும் மன நலமும் என்ற தலைப்பிலும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவர் சித்ரா பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பிலும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மேலாண்மையியல் துறை இணைப் பேராசிரியர் லாசரஸ் ஆளுமைத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பிலும் பேசினர். தொடர்ந்து கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் தலைமை தாங்கினார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இலக்குமி பிரபா வரவேற்றுப் பேசினார். முடிவில் முனைவர் மாசிலாமணி நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமார் 250 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் மற்றும் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story