புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 April 2022 2:40 AM IST (Updated: 2 April 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

மின்கம்பம் அகற்றப்பட்டது
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அந்தோணியார் கோவில் தெரு சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையின் எதிரே சாலையோரத்தில் இரும்பிலான மின்கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக கீழே விழுந்துகிடந்தது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் கிடந்த மின்கம்பத்தை அகற்றி உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

மின்மாற்றி சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதி கோட்டைக்காடு தெற்கு மெயின்ரோட்டில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றி பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்மாற்றியை தாங்கிபிடித்துள்ள மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் உள்ளது. இதன் காரணமாக மின்மாற்றி உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கோட்டைக்காடுகிராமக்கள், தஞ்சை.

Next Story