ஓகைப்பேரையூர் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்

கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூர் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூர் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓகைப்பேரையூர் வடிகால் வாய்க்கால்
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் பனையனார் ஆற்றின் அருகில் ஓகைப்பேரையூர் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் மூலம் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும் போதும், வயல்களில் அதிகளவில் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கும் போதும், மழை காலங்களில் வயல்களில் அளவுக்கு அதிகமாக மழை தண்ணீர் தேங்கி நிற்கும் போதும் தேவையற்ற தண்ணீரை அந்த பகுதி விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர்.
புதர்மண்டி
தற்போது இந்த வடிகால் வாய்க்கால் முழுவதும் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. புதர்மண்டி காணப்படுவதால் தேவையற்ற தண்ணீரை வயல்களிலிருந்து வெளியேற்றுவதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வயல்களில் தேவையற்ற தண்ணீர் தேங்கி விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.
தூர்வார வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூர் வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---
Related Tags :
Next Story