தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 April 2022 9:24 PM IST (Updated: 2 April 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்து வரும் கட்டிடம்
குஜிலியம்பாறை தாலுகா தி.கூடலூர் ஊராட்சி கலிக்கப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. எனவே கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-சண்முகம், தி.கூடலூர்.
சுகாதார வளாகம் வேண்டும்
கன்னிவாடியை அடுத்த டி.புதுப்பட்டியில் சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வன், டி.புதுப்பட்டி.
வேகத்தடை அமைக்கப்படுமா?
நெய்க்காரப்பட்டி மெயின் ரோட்டில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணிவண்ணன், நெய்க்காரப்பட்டி.
ரெயில் பயணிகள் அவதி
பழனி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் தகவல் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர் மூலம் ரெயில் வரும் நேரம், நடைமேடை எண் உள்ளிட்ட விவரங்களை பயணிகள் எளிதில் தெரிந்துகொண்டனர். ஆனால் தற்போது இந்த மையம் செயல்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், பழனி.

Next Story