ரமலான் நோன்பு தொடங்கியது பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரமலான் நோன்பு தொடங்கியது பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 3 April 2022 12:00 AM IST (Updated: 3 April 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அன்னவாசல்:
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர் ஆன் அருளப்பட்டது. ஹஜ்ஜை தவிர ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக்கொடை) ஆகிய 4 கடமைகளும் ஒரு சேர இந்த ரமலான் மாதத்தில் நிறைவேறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க ரமலான் மாத பிறை நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் தென்பட்டதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கின்றனர். இந்த நிலையில் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, சத்திரம், காலாடிப்பட்டி, பரம்பூர், வயலோகம், குடுமியான்மலை, பெருமநாடு, உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Next Story