மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி
ராமநாதபுரம்
மதுரை திருமலை நாயக்கர் மன்னர் கலைக்கல்லூரியில் ஏ.எக்ஸ்.என். அகாடமி மற்றும் மதுரை கோவிந்தராஜ் கலைமேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த சிலம்பரசி சிலம்பம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் ராமநாதபுரம் மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு ராமநாதபுரத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார் கலந்து கொண்டு பரிசு, பதக்கம், கேடயம் மற்றும் வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.இதில் மாணவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story