அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம்

அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம் நடந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-க்கான திட்ட செயலாக்கக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி பேசினார். நடைபெற்றது. கூட்டத்தில் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ல் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அழகியமணவாளம், சின்னப்பட்டாக்காடு, கோமான், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, கண்டிராதித்தம், பூண்டி ஆகிய 7 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பி.எல்.எப். உறுப்பினர்கள், எஸ்.பி.எம். ஊக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ல் மேற்கண்ட ஊராட்சிகளில் நீர்நிலைகளை புனரமைத்தல், குக்குகிராமங்களின் சாலைகள், வீதிகள் மற்றும் தெருக்களை மேம்படுத்துதல், சமத்துவ சுடுகாடு, இடுகாடு ஆகிய இடங்களில் தேவையான வசதிகளை மேம்படுத்துதல், பள்ளிகளில் உட்பட்டமைப்பு மற்றும் பொது பயன்பாடு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உருவாக்குதல், பசுமையான மற்றும் சுத்தமான கிராமங்களை உருவாக்குதல், வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் பணிகள் நடைபெறவுள்ளது.
மேலும், இப்பணிகளை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்து நிர்வாக அனுமதிக்காக விரைவாக அனுப்பிட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் ராஜராஜன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி அசோக்சக்கரவர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story