ஊட்டியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊட்டி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊட்டி தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் விலைவாசி அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்ததால் மீண்டும் விறகு அடுப்புக்கு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story