ஆண்டவன் உத்தரவு பெட்டியில் விபூதி எலுமிச்சம்பழம் வைத்து பூஜை


ஆண்டவன் உத்தரவு பெட்டியில் விபூதி  எலுமிச்சம்பழம் வைத்து பூஜை
x
தினத்தந்தி 3 April 2022 6:01 PM IST (Updated: 3 April 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் விபூதி எலுமிச்சம்பழம் வைத்து பூஜை

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சம்பழம் வைத்து பூைஜ செய்யப்படுகிறது.
சிவன்மலை 
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த ேகாவிலில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும். 
மேலும் நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. முருகப்பெருமான் பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க சொல்வார். அந்த உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் வேறு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். 
விபூதி
இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சம்பழத்தை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து உத்தரவு பெற்ற பக்தர் சிவன்மலை கோவிலுக்கு வந்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் விபூதி மற்றும் எலுமிச்சம்பழம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.  
இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த 1ந் தேதி முதல் போகர் சித்தர் உருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. மேலும் உத்தரவு பொருள் வைக்கப்பட்டு 2 நாட்களே ஆன நிலையில் மீண்டும் மற்றொரு உத்தரவு பொருள் உத்தரவு ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story