குள்ளஞ்சாவடி அருகே விவசாயி மர்ம சாவு கொலையா போலீஸ் விசாரணை

குள்ளஞ்சாவடி அருகே விவசாயி மர்ம சாவு கொலையா போலீஸ் விசாரணை
குறிஞ்சிப்பாடி
மர்ம சாவு
குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் காட்டுசாகையை சேர்ந்தவர் உத்திராபதி(வயது 42). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது மனைவி விஜயா(40) குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உத்திராபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து உத்தராபதியை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story