விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 3 April 2022 10:59 PM IST (Updated: 3 April 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

தோகைமலை, 
தோகைமலை சேவை மைய கூட்ட அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பொதுமக்களின் குறைகள், வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஒவ்வொரு ஊராட்சி வாரியாகவும், அந்தந்த ஊராட்சி செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், கிளை செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


Next Story