லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22). செம்பரம்பாக்கத்தை சேர்ந்தவர் இவருடைய நண்பர் பார்த்திபன் இமானுவேல் (22). இவர்கள் 2 பேரும் நேற்று சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சந்தோஷ் ஓட்டினார். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் பால்பண்ணை அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பார்த்திபன் இமானுவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story