அருணாசல பிரதேச கவர்னர் அஞ்சலி

அருணாசல பிரதேச கவர்னர் அஞ்சலி
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் ெசன்டர் உள்ளது. இது பழமை வாய்ந்த ராணுவ முகாம் ஆகும். இங்கு 34-வது ராணுவ உயர் அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம், அங்குள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதற்கு மெட்ராஸ் ரெஜிமெண்டல் கர்னல் லெப்டினென்ட் ஜெனரல் மன்ஜிந்தர் சிங் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முன்பு உள்ள போர் நினைவு சின்னத்தில், அருணாசல பிரதேச கவர்னரும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான பிரிகேடியர் டாக்டர் பி.டி.மிஸ்ரா, லெப்டினென்ட் ஜெனரல் மன்ஜிந்தர் சிங் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story