கதண்டுகள் தீவைத்து அழிப்பு


கதண்டுகள் தீவைத்து அழிப்பு
x
தினத்தந்தி 5 April 2022 9:49 PM IST (Updated: 5 April 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

கீழையூரில் மரங்களில் கூடுகட்டியிருந்த கதண்டுகள் தீவைத்து அழிக்கப்பட்டன.

வேளாங்கண்ணி:
கீழையூர் ஊராட்சி கீழத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள 2 புளிய மரத்தில் கதண்டுகள் கூடு கட்டிக்கொண்டு, அந்த வழியாக சென்ற பொதுமக்களை கடித்து வந்தன. இதுகுறித்து கீழையூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆனந்தஜோதிபால்ராஜ், வேளாங்கண்ணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வேளாங்கண்ணி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி தீவைத்து அழித்தனர்.

Next Story