மின்வாரிய ஊழியரிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு
மின்வாரிய ஊழியரிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் மின்சார வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). மின்வாரிய ஊழியர். இவரும், இவருடைய நண்பரும் வீரசோழபுரம் விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ேமாட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், திடீரென்று கத்தியைகாட்டி மிரட்டி சுதாகரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் கூச்சல் போடவே அருகில் உள்ளர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த ஆசாமி அருகில் இருந்த வீட்டு கூரை மீது ஏறி, ஓடுகளை பிரித்து பொதுமக்கள் மற்றும் சுதாகர் மீது வீசினார். பதிலுக்கு ஊர் பொதுமக்களும் கற்களை எடுத்து அந்த ஆசாமி மீது வீசினர். இதனால் அந்த ஆசாமி வீட்டின் கூரையில் இருந்து வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்தார். இது குறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அந்த ஆசாமியை விசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகவேல் என்கின்ற ராஜா என்ற பைனான்ஸ் ராஜா (42) எனவும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் கொலை மற்றும் கொள்ளை வழிப்பறி வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Related Tags :
Next Story