அகழாய்வில் கிடைத்த அதிசய பொருட்கள்


அகழாய்வில் கிடைத்த அதிசய பொருட்கள்
x
தினத்தந்தி 6 April 2022 12:33 AM IST (Updated: 6 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே அகழாய்வில் கிடைத்த அதிசய பொருட்கள் கிடைத்தன.

தாயில்பட்டி,
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று தோண்டப்பட்ட குழியில் குடிசை வீடுகளில் தரையை சமப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அரவை கல் கிடைத்துள்ளது. தற்போது வீடுகளில் தரையை சமப்படுத்துவதற்கு மரக்கட்டைகள் அல்லது சம்மட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. முற்காலத்தில் அரவைகல் எனும் கற்களை கொண்டு சமப்படுத்தி உள்ளனர். மேலும் சதுரங்க கட்டைகள், சங்கு வளையல்கள், கண்ணாடி பாசிமணிகள் போன்ற அதிசய பொருட்கள் அதிக அளவு தொடர்ந்து கிடைத்து வருகின்றன. ஆகையால் இப்பகுதியில் முற்காலங்களில் கண்ணாடி பாசிமணிகள் உற்பத்தி நடந்திருக்கலாம் என தெரிய வருகிறது என்று அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறினார். அப்போது விஜயகரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கங்காள ஈஸ்வரி, அ.தி.மு.க. வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story