வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2022 9:06 PM IST (Updated: 6 April 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

சிக்கோடியை சேர்ந்த வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெலகாவி மாவட்டம் சிக்கோடி பகுதியில் வசித்து வந்தவர் அபிஷேக்(வயது 21). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி நிப்பானி சகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் அபிஷேக் கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரை கொன்றது அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து தனியார் வணிக வளாகம் ஒன்றில் வேலை பார்த்து வரும் அமன் எக்சம்பே(21) மற்றும் 3 சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிரிக்கெட் விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறால் அவர்கள் 4 பேரும் அபிஷேக் மீது கடும் கோபத்தில் இருந்ததும், பின்னர் கஞ்சா பயன்படுத்திவிட்டு வந்து அவர்கள் அபிஷேக்கை கொன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story