பாம்பன் குந்துகால் பகுதியில் பலத்த மழை

பாம்பன் குந்துகால் பகுதியில் பலத்த மழை பெய்தது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. அது போல் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக வெயில் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பாம்பன் குந்துகால் பகுதியில் பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. பகல் 11 மணிக்கே மாலை 6 மணி போல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பலத்த மழையால் ஆழ் கடல் மீன்பிடி துறைமுக தளத்தில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பாம்பன் குந்துகால் பகுதியில் பலத்த மழை பெய்த நிலையிலும் பாம்பன் நகர் மற்றும் ராமேசுவரம் பகுதியில் மழை இல்லை. பாம்பன் பாலம் பகுதியில் மழை பெய்வது போன்று வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டிருந்்த நிலையிலும் மழை பெய்யாததால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story