உயர்கல்வி-வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் குறித்து கருத்தாளர்களுக்கு பயிற்சி

உயர்கல்வி-வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் குறித்து கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உயர்கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி பாடாலூரில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது. பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். மாநில கருத்தாளர்களான விரிவுரையாளர் சீரங்கன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் அறிவேந்தன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியின் நோக்கத்தின்படி அரசு பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல் பயிற்சியை எடுத்து கொண்ட மாவட்ட கருத்தாளர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், என்று மாநில கருத்தாளர்கள் தெரிவித்தனர். இதில் மாவட்ட கருத்தாளர்களான பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த 25 முதுநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story