11-ம் வகுப்பு மாணவியை கடத்தியவர் கைது


11-ம் வகுப்பு மாணவியை கடத்தியவர் கைது
x

மகனுக்கு திருமணம் செய்து வைக்க 11-ம் வகுப்பு மாணவிைய கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

மேச்சேரி:-
மேச்சேரி அருகே உள்ள நங்கவள்ளி பகுதியை சேர்ந்த 16 வயதுடய 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 40), அவருடைய மனைவி நாகலட்சுமி, அவர்களது மகன்கள் பவித்ரன், சுரேந்திரன் ஆகியோர் வீடு புகுந்து கடத்தி சென்றுவிட்டதாக மாணவியின் பாட்டி நங்கவள்ளி போலீசில் புகார் செய்தார். அவர்கள் பவித்ரனுக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் நங்கவள்ளி போலீசார் 4 பேர் மீதும் மாணவியை கடத்தியதாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்திய போலீசார் மாணவியை மீட்டனர். இதனிடையே தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பழனிசாமியை நங்கவள்ளி போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story