திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் அடையாளஅட்டை வழங்கும் முகாம்: கலெக்டர் செந்தில்ராஜ்

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் அடையாளஅட்டை வழங்கும் முகாம் வருகிற 22-ந் தேதி நடைபெறுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஆத்தூர், ஆறுமுகநேரி, மணப்பாடு, உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ஒவ்வொரு மாதமும் 4-வது வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான முகாம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இந்த முகாமில் சிறப்பு டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். எனவே திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story