புத்தாக்க பயிற்சி முகாம்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் புத்தாக்க பயிற்சி முகாம்
நாகூர்:
தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை சார்பில் நாகூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர்களுக்கான புத்தாக பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் வரவேற்றார். இதில் முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் கலந்துகொண்டு அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார். முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி தலைமை ஆசிரியை ரபியத்துல் பஜ்ரியா, நகர மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் தகவல் தொடர்பு மைய ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தொகுத்து வழங்கினார். முடிவில் வேதாரண்யம் தேசிய படை ஆசிரியை கற்பகவள்ளி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story