சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்


சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 10 April 2022 1:32 AM IST (Updated: 10 April 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சேலம்:-
சேலத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
விழிப்புணர்வு ஊர்வலம்
சேலம் அஸ்தம்பட்டியில் ஒருங்கிணைந்த கோர்ட்டில் சமரச நாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி சமரச மையத்தின் பயன்கள், முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து பேசினார். நீதிபதி கிறிஸ்டல் பபிதா வரவேற்றார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஆபிராகாம் லிங்கன், பத்மா, முனுசாமி, வக்கீல் சங்க தலைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் நன்றி கூறினார்.
தொடர்ந்து சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோர்ட்டு வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை சென்று மீண்டும் கோர்ட்டை வந்தடைந்தது. இதில் நீதிபதிகள், வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓமலூர்
ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே மாவட்ட சமரசம் மற்றும் தீர்வு மையம் சார்பில் சமரச நாள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும்  ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு ஓமலூர் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான அஸ்பக் அகமது, ஓமலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்வே தாரண்யன் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். 
இதில் ஓமலூர் வக்கீல்கள் சங்க தலைவர் ரங்கநாதன், மூத்த வக்கீல்கள் சிவராம், மணி, அமிர்தலிங்கம், ஞானசேகரன், மற்றும் ஜவகர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி
எடப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி தலைமை தாங்கி, பேசினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன், பள்ளி தலைமை ஆசிரியை சீதா, முன்னாள் தலைமை ஆசிரியர் அர்த்தனாரி, நகர மன்ற துணைத்தலைவர் ராதா நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வக்கீல்கள் மணி, சங்கர், செல்லப்பன், விஜயா, வேலுசாமி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story