போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்குகிறது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4-ல் அடங்கிய பணிகளான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற 7,301 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு 444 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட போட்டி தேர்வுகளுக்கும், மேலும் விரைவில் வெளியாகவுள்ள இரண்டாம் நிலை போலீஸ்காரர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரிலோ அல்லது 9080182131 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து வகுப்பில் கலந்து கொள்ளலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story