கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி தத்தளிப்பு


கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி தத்தளிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 1:02 AM IST (Updated: 11 April 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

மின்மோட்டாரை சரிசெய்ய கிணற்றுக்குள் இறங்கிவிட்டு மேலே ஏறியபோது, தவறி விழுந்த விவசாயி தண்ணீரில் தத்தளித்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பெரம்பலூர்
தத்தளிப்பு 
பெரம்பலூர் அருகே உள்ள எறைய சமுத்திரம் கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தற்போது 3 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் கிணற்றுக்குள்  போடப்பட்டிருந்த நீர் மூழ்கி மோட்டாரில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்ய நேற்று மதியம் சீனிவாசனின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 48) என்பவர், கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.
 பின்னர் அவர் மோட்டாரில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை சரி செய்து விட்டு மேலே ஏறும் போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து அடிபட்டு ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.
விவசாயி மீட்பு
 இதனை கிணற்றின் மேலிருந்து கண்டவர்கள் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய சிறப்பு அலுவலர் ராமன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிற்றின் மூலம் நாற்காலியில் முடிச்சு போட்டு ரமேசை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.  இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story