திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-2022-ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு போட்டிகள் நாளை (செவாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம். ஆடவர் மற்றும் மகளிருக்கான தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். இதில் முதல் ஐந்து இடத்தை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். உரிய சான்று கொண்டு வராதவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். பள்ளிகளில் பயில்வோர் சம்பந்தப்பட்ட பள்ளியின் சார்பில் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை அனுப்பி வைக்கப்பட வேண்டும். சக்கர நாற்காலி போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சக்கர நாற்காலியுடன் கலந்து கொள்ள வேண்டும். எனவே விளையாட்டில் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவ மாணவர்களை உரிய நேரத்தில் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story