அரசு பள்ளிக்கூடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு; நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர்


அரசு பள்ளிக்கூடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு; நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 24 April 2022 3:46 AM IST (Updated: 24 April 2022 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஈரோடு
ஈரோட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு செய்யப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் பள்ளி மேலாண்மைக்குழு அறிமுக கூட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து மறு கட்டமைப்புக்கான நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நேற்று அரசு பள்ளிக்கூடங்களில் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் அனைத்து கல்வி மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தப்பட்டது. ஈரோடு கல்வி மாவட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரி ஜோதிசந்திரா, வட்டார கல்வி அதிகாரி மேகலா ஆகியோர் அறிவுரையின் படி அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி, ஒன்றிய பள்ளிக்கூடங்களிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் பள்ளிக்கூட வளாகங்களில் நடந்தது.
நிர்வாகிகள்
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் பலரும் திரளாக வந்திருந்தனர். அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை கே.சுமதி வரவேற்றார். அவர் பள்ளி மேலாண்மைக்குழுவின் பணிகள், அது தொடர்பான சட்டங்கள், நிர்வாகிகளின் கடமைகள், நிர்வாகிகள் தேர்வு குறித்து பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோர், சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் என 15 பேர், உள்ளாட்சி பிரதிநிதிகள் தரப்பில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரேவதி திருநாவுக்கரசு, பிரவீணா ஆகியோரும், கல்வியாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயக்குமார், ஆசிரியர் பிரதிநிதியாக ஆசிரியை லதா மற்றும் தலைமை ஆசிரியர் கே.சுமதி என 20 பேர் கொண்ட குழு பெற்றோர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக ஹேமலதா, துணைத்தலைவராக சித்திரைகுமார் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அனைவரும் உறதிமொழி வாசித்து தங்கள் பணியை ஏற்றுக்கொண்டனர். முடிவில் ஆசிரியை லதா நன்றி கூறினார்.
ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியை சாந்தாமணி, மாநகராட்சி கவுன்சிலர் ஜெயந்தி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story