இணையதளம் மூலம் எடைகள்,அளவை முத்திரையிடுதல் குறித்து பயிற்சி


இணையதளம் மூலம் எடைகள்,அளவை முத்திரையிடுதல் குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 24 April 2022 3:46 AM IST (Updated: 24 April 2022 3:46 AM IST)
t-max-icont-min-icon

இணையதளம் மூலம் எடைகள்,அளவை முத்திரையிடுதல் குறித்து பயிற்சி

தென்காசி:
சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், எடைகள் மற்றும் அளவைகளை முத்திரையிட இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை குறித்து விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நெல்லை தொழிலாளர் நலத்துறை கட்டிட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா தலைமை தாங்கினார். தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் முன்னிலை வகித்தார். 
இந்த கூட்டத்தில், இணைய வழி முத்திரை பணிக்கான மென்பொருளை பயன்படுத்தும் முறை குறித்தும், இணையவழி மூலமாக முத்திரையிட விண்ணப்பித்தல், முத்திரை கட்டணம் செலுத்துதல் மற்றும் மறுபரிசீலனை சான்றிதழ்களை இணையவழி மூலமே பெற்றுக் கொள்ளுதல் ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு தெளிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் பயனாளர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், நெல்லை, தென்காசி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள், எடையளவுகள் தயாரிப்பாளர், விற்பனையாளர்கள் மற்றும் பழுது பார்ப்பவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story