தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவன் ரெயில் மோதி பலி
தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவன் ரெயில் மோதி பலியானான்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் - காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே மொளகரம்பட்டி பகுதியில் ஜோலார்பேட்டை மார்க்கமாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் சுமார் 16 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் திருப்பத்தூர் அருகே உள்ள சு.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் ஸ்ரீராம் (வயது 16) என்பதும், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்ததும் தெரியவந்தது. இயற்கை உபாதை கழிக்க தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story