புதுவயலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும்-மாங்குடி எம்.எல்.ஏ. கோரிக்கை


புதுவயலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும்-மாங்குடி எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 25 April 2022 12:00 AM IST (Updated: 25 April 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

புதுவயலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்று மாங்குடி எம்.எல்.ஏ. ேகாரிக்கை விடுத்தார்.

காரைக்குடி,

காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மாங்குடி, தமிழக முதல்-அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
 காரைக்குடி-திருச்சி நெடுஞ்சாலையில் கோட்டையூர் ஸ்ரீராம்நகர் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். காரைக்குடி நகருக்கு சுற்று வட்ட சாலை அமைக்க வேண்டும். காரைக்குடி பகுதியில் நீண்ட நாட்களாக வசித்துவரும் ஏழை-எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டா வழங்குதல் பட்டா மாறுதல் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பட்டா வழங்க வேண்டும்.புளியாலில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தேவகோட்டையில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலமான அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். புதுவயலை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.


Next Story