குடிபோதையில் பேக்கரியில் தகராறு; 4 பேர் கைது


குடிபோதையில் பேக்கரியில் தகராறு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2022 2:23 AM IST (Updated: 25 April 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் பேக்கரியில் தகராறு செய்த 4 பேர் கைது

திசையன்விளை:
திசையன்விளை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் திசையன்விளை காமராஜர் நகரை சேர்ந்த விக்ரந்த் (வயது 36) என்பவர் கணக்காளராக வேலை செய்து வருகிறார். அந்த பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் வெம்மணங்குடியை சேர்ந்த கண்ணன் (24), ராபின் (27), ஆர்.சி. நந்தன்குளம் கஸ்பர் (37), கீழஉவரி ராஜேஷ் (28) ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிகேட்ட விக்ரந்த்தை 4 பேரும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக விக்ரந்த் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.

Next Story