நெல்லை அருகே லாரி, காரில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது

லாரி, காரில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்
நெல்லை:
நெல்லை அருகே லாரி, காரில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
நெல்லை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார், நெல்லை அருகே ஆயன்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 20 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து காரில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த முருகதாசை (வயது 37) போலீசார் கைது செய்தனர்.
கேரளாவுக்கு...
இதேபோல் அந்த வழியாக வந்த லாரியில் 280 மூட்டைகளில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரியில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த அஸ்வினை (21) போலீசார் கைது செய்தனர்.ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கார், லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைதான முருகதாஸ், அஸ்வின் ஆகிய 2 பேரும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல், பண்டாரவிளை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
Related Tags :
Next Story