கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 8,263 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 60 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 57 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சித்ரதுர்கா, தார்வார், விஜயாப்புராவில் தலா ஒருவர் இறந்தனர். 26 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 46 ஆயிரத்து 934 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றும் புதிதாக உயிரிழப்பு இல்லை. நேற்று 63 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 39 லட்சத்து 5 ஆயிரத்து 159 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 1,676 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 0.72 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 3 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்று பாதிப்பு குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story