விஷம் குடித்து டிரைவர் தற்கொலை மனைவி 2-வது திருமணம் செய்ததால் விபரீத முடிவு

புதுக்கடை அருகே மனைவி 2-வது திருமணம் செய்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே மனைவி 2-வது திருமணம் செய்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
டிரைவர்
புதுக்கடை அருகே உள்ள தும்பாலி பகுதியை சேர்ந்தவர் அல்லேஸ். இவரது மகன் டேவிட் ராஜ் (வயது 38), டிரைவர். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். மேலும், பலமுறை அவர்களை உறவினர்கள் சேர்த்து வைக்க முயன்றும் முடியவில்லை. தனியாக வசித்து வந்த டேவிட்ராஜூக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் டேவிட்ராஜின் மனைவி 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக டேவிட்ராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று டேவிட்ராஜ் வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவரது தாயார் அங்கு சென்று பார்த்தார். அப்போது, டேவிட்ராஜ் விஷம் குடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுபற்றி புதுக்கடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து டேவிட் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
---
Related Tags :
Next Story